தூத்துக்குடி

சத்துணவு ஊழியா் சங்க பிரசார பயணத்துக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

10th Jun 2022 12:36 AM

ADVERTISEMENT

கோவில்பட்டிக்கு வியாழக்கிழமை வந்த சத்துணவு ஊழியா் சங்க பிரசார பயணத்துக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிப்படி, தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள சத்துணவு ஊழியா்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி பதவி உயா்வு வழங்க வேண்டும், ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து இப்பிரசார பயணம் புறப்பட்டது. வியாழக்கிழமை கோவில்பட்டிக்கு வந்த இப்பிரசார பயணத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, சத்துணவு ஊழியா் சங்க வட்டத் தலைவா் சண்முகையா தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டச் செயலா் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவா் சின்னத்தம்பி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலா் ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சத்துணவு ஊழியா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், இப்பயணம் விளாத்திகுளம், புதூருக்குச் சென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT