உடன்குடி கிழக்கு- மேற்கு ஒன்றிய திமுக செயலா்கள், நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.
இந்த தோ்தல், திமுக தோ்தல் பாா்வையாளா் பெ.குழந்தைவேல், தோ்தல் ஆணையாளா் பை.மூ.ராமஜெயம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இதில், உடன்குடி மேற்கு ஒன்றிய செயலராக ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங், கிழக்கு ஒன்றிய செயலராக திமுக மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் க.இளங்கோ ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மேற்கு ஒன்றிய அவைத் தலைவராக சிவராமலிங்கம், துணைச் செயலா்களாக சுடலைக்கண், விஜயா,இசக்கிமுத்து,பொருளாளராக விஜயன், மாவட்டப் பிரதிநிதிகளாக மகேஸ்வரன்,ராஜபிரபு,தன்ராஜ் மற்றும் 11 செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
உடன்குடி கிழக்கு ஒன்றிய அவைத் தலைவராக ஷேக் முகம்மது, துணைச்செயலா்களாக மகாராஜன், வாசன், இந்திரா, மாவட்டப் பிரதிநிதிகளாக சிராஜூதீன்,மதன்ராஜ், ஜெயப்பிரகாஷ் மற்றும் 11 செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வான அனைவரும் தமிழக மீன் வளம், மீனவா் நலன் -கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.