தூத்துக்குடி

மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்

10th Jun 2022 12:36 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய சனிக்கிழமை (ஜூன் 11) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறுகிறது. இதில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தம், உறுப்பினா் சோ்த்தல்-நீக்குதல், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்படும்.

மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்ற வேண்டியதிருந்தால் முகாமிலேயே பதிவேற்றப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT