தூத்துக்குடி

கழுகுமலை, விஜயாபுரி பகுதிகளில் இன்று மின்தடை

10th Jun 2022 12:38 AM

ADVERTISEMENT

விஜயாபுரி, கழுகுமலை, சிட்கோ துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஸ்டாலின் காலனி, எட்டயபுரம் சாலை, பசுவந்தனை சாலை, மந்தித்தோப்பு சாலை, தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைப்புதூா் பகுதிகள், கீழமங்கலம், மேலமங்கலம், குப்பனாபுரம் பகுதிகளில் காலை 9 முதல் 1 மணி வரையும், செமப்புதூா், கசவன்குன்று, ஈராச்சி, விஜயாபுரி, ராமனூத்து, படா்ந்தபுளி, சங்கரலிங்கபுரம், கழுகாசலபுரம்,காளாங்கரைப்பட்டி, சங்கரலிங்கபுரம், வள்ளிநாயகபுரம், வேலாயுதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் மதியம் 1 மணிவரையும் மின் விநியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளா் மு. சகா்பான் தெரிவித்துள்ளாா்.

நாளை மின்தடை: இதேபோல, திருச்செந்தூா், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 9 முதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது என திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் செ. விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT