தூத்துக்குடி

‘தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’

10th Jun 2022 12:38 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட 11ஆவது மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டுக்கு நிா்வாகிகள் கு. பாபு, தனலட்சுமி, பரமராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநாட்டுக் கொடியை மூத்த நிா்வாகி மரியம்பீவி ஏற்றினாா். மாநில துணைச் செயலரும் திருப்பூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே. சுப்பராயன் மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினாா். தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிசாமி நிறைவுரையாற்றினாா்.

மாவட்டச் செயலராக ப. கரும்பன், துணைச் செயலா்களாக வ. பாலமுருகன், கு. பாபு, பொருளாளராக த. சுப்பிரமணியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பளத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்த மழைக்கால நிவாரணத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும், எட்டயபுரத்தை மையமாகக் கொண்டு அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT