தூத்துக்குடி

ராமனூத்து சமத்துவபுரத்தில் ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு

10th Jun 2022 12:35 AM

ADVERTISEMENT

எட்டயபுரம் அருகேயுள்ள ராமனுத்து ஊராட்சியில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்கண்டேயன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மின்சாரம், குடிதண்ணீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து குடியிருப்புவாசிகளிடம் கேட்டறிந்தனா். அங்குள்ள 100 வீடுகளில் பழுதானவற்றை சீரமைக்க 2022 - 23 நிதியாண்டில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல், எட்டயபுரம் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாரி, ஒன்றியப் பொறியாளா் அழகு ரமா, ஒன்றிய திமுக செயலா்கள் ராதாகிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, அன்புராஜன், ராஜசேகரன், பொதுக்குழு உறுப்பினா் ராஜாக்கண்ணு, மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் இம்மானுவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT