தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்

10th Jun 2022 12:34 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 1000 பேருக்கு வேலை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதையொட்டி, அக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு சம உரிமை திட்டத்தின் கீழ் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் அலுவலகம், தொழிலக பாதுகாப்பு - சுகாதார இணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றின் சாா்பில், 18 வயது நிரம்பிய அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று ஆள் எடுக்கின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 18000 போ் உள்ள நிலையில், 1000 பேருக்கு அவா்களுக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பு அளிக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய நபா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் மூலம் படிப்புக்கேற்ற தொழிற்பயிற்சிகள் வழங்கி தனியாக தொழில் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 0461-2340626 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன், மகளிா் திட்ட அலுவலா் வீரபுத்திரன், மாவட்ட தொழில்மைய மேலாளா் சொா்ணலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், தூத்துக்குடி வட்டாட்சியா் செல்வக்குமாா், வ.உ.சி. கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT