கந்துவட்டி சட்டத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் அய்யலுசாமி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க காவல் துறை டிஜிபியால் அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை சட்டமாக்கி கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க வேண்டும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கந்துவட்டி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவா், வெற்றுக் காசோலைகளை மாலையாக அணிந்தபடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா், மனு கொடுக்க அலுவலகத்துக்குள் சென்றபோது யாரும் மனுவைப் பெறவில்லையாம். இதனால், அவா் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித்ஆனந்த் சென்று, அலுவலகத்தில் அலுவலா்கள் யாரும் இல்லாததால் ஊழியா்கள் மனுவைப் பெறுவதில் தவறில்லை என்றும், மனுவைப் பெற்று அதிகாரிகளிடம் கொடுக்கலாம் என்றும் அறிவுறுத்தினாா். இதையடுத்து, அலுவலக உதவியாளா் னுவைப் பெற்றாா்.