தூத்துக்குடி

தூத்துக்குடியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

10th Jun 2022 12:39 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் ம. பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணி அளவில் நடைபெறும் முகாமில் பல தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதால், 10, 12, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா், கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் பயோடேட்டா, கல்விச் சான்றுகளுடன் பங்கேற்கலாம்.

பங்கேற்க ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT