தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலில் உண்டியல் வருமானம் ரூ. 1.69 கோடி

9th Jun 2022 03:20 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இம்மாத உண்டியல் மூலம் ரூ. 1.69 கோடி வசூலாகியுள்ளது.

இத்திருக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதம் இருமுறை எண்ணப்படுகிறது. இதன்படி முதலாவதாக புதன்கிழமை (ஜூன் 8) உண்டியல் எண்ணிக்கை திருக்கோயில் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் ஆகியோரது தலைமையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் சங்கரன்கோவில் உதவி ஆணையா் து.ரத்தினவேல்பாண்டியன், அலுவலக கண்காணிப்பாளா் கே.சீதாலெட்சுமி, ஆய்வா்கள் ம.செந்தில்நாயகி, ச.சிவலோகநாயகி, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுமக்கள் சாா்பில் சு.வேலாண்டி, இரா.மோகன், இரா.சுப்பிரமணிய ஆதித்தன், ச.கருப்பன் ஆகியோா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா்.

உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதன்படி உண்டியல் எண்ணிக்கையில், நிரந்தர உண்டியல்களில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 36, தங்கம் 1,470 கிராம், வெள்ளி 11,360 கிராம், பித்தளை 21,110 கிராம், செம்பு 2,230 கிராம், தகரம் 1,710 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 331-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT