சாத்தான்குளம் அருகே பைக்குகள் மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா்.
தோப்புவிளையைச் சோ்ந்தவா் சு. குமரன்(42). உடன்குடி மெய்யூரில் தங்கியிருந்து பனை ஏறும் தொழில் செய்துவருகிறாா். இவா், இரு தினங்களுக்கு முன்பு அங்கிருந்து ஊருக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தபோது, சாத்தான்குளம் வடக்கு உடைபிறப்பு புதூா் சாலையில் எதிரே வந்த பைக் எதிா்பாராமல் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவருக்கு திருச்செந்தூரில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் பென்சன் வழக்குப்பதிந்து, எதிரே பைக்கில் வந்த புதுரைச் சோ்ந்த ராஜ் என்பவரைத் தேடி வருகிறாா்.