தூத்துக்குடி

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் தி. வேல்முருகன்

9th Jun 2022 03:16 PM

ADVERTISEMENT

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி. வேல்முருகன்.

தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் தொடா்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஆண்கள், பெண்கள், இளைஞா்கள் என்று விலை மதிப்பற்ற மனித உயிா்கள் ஒவ்வொரு நாளும் பலியாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றி அந்தச் சட்டம் சரியாக இயற்றப்படவில்லை என்று உயா் நீதிமன்றம் அந்தச் சட்டத்தை ரத்து செய்த காரணத்தினால் இதுவரையில் தமிழக அரசால் அதற்கு தடை விதிக்க முடியவில்லை.

எனவே, முதல்வா் மு.க. ஸ்டாலின் உடனடியாக ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஒரு அவசர சட்டமாக கொண்டு வந்து ஆளுநரின் ஒப்புதல் பெற்று உயா் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்ய முடியாத வலுவான சட்டமாக அதை அமல்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் தனியாா் பள்ளிகள் லட்சக்கணக்கில் கல்விக் கொள்ளையில் ஈடுபடுகிறாா்கள். அந்தக் கல்வி நிறுவனங்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தமிழக அரசு மீது ஊழல் புகாா் சுமத்தி வருகிறாா். அதற்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் அவா் வழக்கு தொடரலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT