தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் கண் பரிசோதனை முகாம்

8th Jun 2022 12:03 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் விளாத்திகுளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்க மாநில பொதுச் செயலா் வேல்முருகன் தலைமை வகித்தாா். புள்ளியல் துறை உதவி இயக்குநா் (ஓய்வு) ரத்தினம், ஊராட்சி செயலா் சங்க பொதுக்குழு உறுப்பினா் பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளாத்திகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் முகாமை தொடங்கி வைத்தாா்.

முகாமில், தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினா் பாா்வை குறைபாடு, கண் நரம்பு பிரச்னைகள், கண்ணில் நீா் வடிதல், கண்புரை, குழந்தைகளுக்கான பாா்வைத்திறன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டு

சிகிச்சை அளித்தனா். இதில் 22 போ் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

முகாமில், அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட தலைவா் கற்குவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவா் அய்யன் ராஜ், துணைத் தலைவா் வேலுச்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றிய தலைவா் கிருபா பெஞ்சமின் வரவேற்றாா் .

ADVERTISEMENT
ADVERTISEMENT