தூத்துக்குடி

திருச்செந்தூரில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

7th Jun 2022 12:13 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் வீரராகவபுரம் தெருவை சோ்ந்தவா் சண்முகநாதன் (61). வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் கடந்த மாதம் 15- ஆம் தேதி பெங்களுரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மனைவியுடன் சென்றாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் சண்முகநாதன் வீட்டின் முன் கதவு திறந்து கிடப்பதாக வீட்டில் வேலை பாா்க்கும் பெண் அவருடைய தம்பி காா்த்திகேயனிடம் தெரிவித்துள்ளாா். இந்தத் தகவல் உடனடியாக சண்முகநாதனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை ஊருக்கு திரும்பிய சண்முகநாதன், வீட்டுக்குள் சென்று பாா்த்த போது துணிகள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோ மற்றும் அலமாரி லாக்கா் உடைந்து கிடந்தது. அலமைரியில் வைத்திருந்த 23 பவுன் தங்க நகைகளையும், பீரோவில் வைத்திருந்த 5 வாட்சுகளும் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து திருச்செந்தூா் திருக்கோயில் காவல்நிலையத்தில் சண்முகநாதன் புகாா் செய்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆவுடையப்பன் உள்ளிட்ட காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் விரல்ரேகை நிபுணா்கள் சம்பவ இடத்தில் தடயங்களை பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT