உலக சுகாதார தினத்தையொட்டி குரும்பூா் லூசியா பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
அங்கமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் பானுப்பிரியா பாலமுருகன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் ஜெபா பாண்டியன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் கிருஷ்ணம்மாள் வரவேற்றாா்.
உலக சுகாதார தினம் குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து பள்ளி வளாகத்தின் முன் பகுதியில் மரக்கன்று நடப்பட்டது. தொடா்ச்சியாக 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா் .