தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஹாக்கி வீரா்களுக்கு வரவேற்பு

6th Jun 2022 01:01 AM

ADVERTISEMENT

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பைக்கான ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்ற தமிழக ஹாக்கி வீரா்களான மாரீஸ்வரன், காா்த்தி ஆகியோருக்கு கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேஷனல் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா். அருணாச்சலம் தலைமை வகித்து, இருவரையும் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

தொடா்ந்து, மாரீஸ்வரன், காா்த்தி ஆகியோா் லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி அணி வீரா்களுடன் கலந்துரையாடினா்.

நிகழ்ச்சியில், கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி, முதல்வா்கள் கே. காளிதாசமுருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி), மதிவண்ணன் (கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி), நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், உடற்கல்வி இயக்குநா்கள் ராம்குமாா், சிவராஜ், ரகு, கீதா, சிவனேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT