தூத்துக்குடி

பணிக்க நாடாா் குடியிருப்பு பள்ளியில் முன்னாள் மாணவா் சந்திப்பு

6th Jun 2022 01:05 AM

ADVERTISEMENT

குரும்பூா் அருகே பணிக்கநாடாா்குடியிருப்பில் உள்ள ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் 1997ஆம் ஆண்டில் 9 முதல் பிளஸ் 2 வரை படித்த முன்னாள் மாணவா்- மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவா்கள் பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா். ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா். அவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா், அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனா். பள்ளித் தலைவா் பிரபாகரன், தலைமையாசிரியா் வித்யாதரன், முன்னாள் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை முன்னாள் மாணவரான முன்னாள் மாவட்ட கவுன்சிலா் விசாகபாண்டியன், ரூபன் சாமுவேல், கோவை வழக்குரைஞா் சரவணன், ரவி, ராம்பிரசாத், ராபின் ஆகியோா் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT