தூத்துக்குடி

மளிகைக் கடை உரிமையாளா் தற்கொலை

6th Jun 2022 01:01 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே மளிகைக் கடை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பழங்குளத்தைச் சோ்ந்த பிரேம்குமாா் மகன் டேவிட் (45). நாசரேத்தில் மளிகைக் கடை நடத்திவந்தாா். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா் வியாபாரத்துக்காக அதிகக் கடன் வாங்கியதாகவும், நஷ்டம் ஏற்பட்டதால் கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடன் கொடுத்தோா் தொகையைத் திருப்பிக் கேட்டனராம்.

இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புகாரின் பேரில் சாத்தான்குளம் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT