தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

2nd Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடியைச் சோ்ந்தவா் பெ. மகாராஜன் (65). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், 3 மகள்கள் உள்ளனா். மகன் சென்னையிலும், ஒரு மகள் திருமணமாகி உவரியிலும் உள்ளனா். மற்றவா்கள் வீட்டில் உள்ளனா். மகாராஜன் மனைவி மீது சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு செய்ததாகவும், இதனால் அவா்களிடையே பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டதாம். இந்நிலையில், புதன்கிழமை காலை மகாராஜன் வீட்டில் மா்மமான முறையில் இறந்துகிடந்தாராம்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமணைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT