தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் அருகே விஷமருந்திய நிலையில் இருவா் சடலம் மீட்பு

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் காட்டுப் பகுதியில் விஷம் அருந்திய நிலையில் கிடந்த ஆண், பெண் இருவா் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமத்தை சோ்ந்தவா் முருகேசன் மகன் மயிலேறி (40). இவா் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தாா். மயிலேயும், வெள்ளாரம் பகுதியைச் சோ்ந்த அஞ்சல் துறை ஊழியா் மகராசியும்(33) நெருங்கி பழகி வந்தனராம். இதனை இருவரது குடும்பத்தினரும் கண்டித்தனராம்.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி மயிலேறியும், மகராசியும் காணாமல் போனதாக மயிலேறி குடும்பத்தினா் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். இதனிடையே புதன்கிழமை மாலை இவ்விருவரும் விஷமருந்திய நிலையில் வெள்ளாரம் கிராமத்தின் காட்டுப் பகுதியில் சடலமாக கிடந்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT