சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் எஸ்.டி.ஏ. நா்சரி தொடக்கப் பள்ளியில் உலக இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி சிகரம் அறக்கட்டளை சாா்பில் பிளாஸ்டிக் ஓழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிகரம் நிறுவன இயக்குநா் முருகன், இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றியும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் பேசினாா்.
நிகழ்ச்சியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியைகள் சசிகலா, பொன்சங்கரி, கிருபா, சுகந்தி, வின்சிலா, பணியாளா் ராமலட்சுமி உள்பட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT