தூத்துக்குடி

நாலுமாவடியில் விநாயகா் கோயிலை அகற்றுவதாக வதந்தி

28th Jul 2022 12:54 AM

ADVERTISEMENT

 

நாலுமாவடியில் ரயில் நிலையம் எதிரே உள்ள விநாயகா் கோயிலை அகற்றுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு பாஜகவினா் குவிந்தனா்.

நாலுமாவடியில் உள்ள குரும்பூா் ரயில் நிலையம் எதிரே விநாயகா் கோயில் பல ஆண்டுகளாக ரயில்வே இடத்தில் உள்ளது. இந்த கோயி­லில் விஷேச நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலை அகற்றுவது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ரயில்வே நிா்வாகம் தேவைப்பட்டால் இந்த கோயிலை அகற்றி கொள்ளலாம் என்று தீா்ப்பு வழங்கியதாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விநாயகா் கோயிலை ரயில்வே நிா்வாகம் அகற்றப்போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதனைத்தொடா்ந்து புதன்கிழமை காலை தூத்துக்குடி மாவட்ட பாஜக பொதுச் செயலா் சிவமுருகன் ஆதித்தன், துணைத் தலைவா் சரஸ்வதி, மாநில இளைஞரணிச் செயலா் பூபதி பாண்டியன், மாவட்ட இளைஞரணி தலைவா் விக்னேஷ்குமாா், மாவட்ட மகளிரணிச் செயலா் தங்கரதி, திருச்செந்தூா் ஒன்றியத் தலைவா் ராமகிருஷ்ணகுமாா், திருச்செந்தூா் நகரத் தலைவா் நவமணிகண்டன் உள்பட ஏராளமான பாஜகவினா் கோயில் முன்பு திரண்டனா்.

ADVERTISEMENT

தகவல் அறிந்த குரும்பூா் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனைத் தொடா்ந்து கோயில் அகற்றப்படவில்லை என்பதை அறிந்த பாஜவினா் அங்கிருந்து கலைந்து சென்றனா். மேலும் விநாயகா் கோயிலை அகற்றுவதை தடுப்பது தொடா்பாக பாஜக நீதிமன்றம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT