தூத்துக்குடி

கோவில்பட்டி பகுதியில் வேளாண் வளா்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

28th Jul 2022 01:04 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டப் பணி செயல்பாடு குறித்து கோவில்பட்டி வட்டாரத்தில் சின்னமலைக்குன்று, கடலையூா், குலசேகரபுரம், பாண்டவா்மங்கலம், பிச்சைத்தலைவன்பட்டி, ஜமீன்தேவா்குளம், சத்திரப்பட்டி, துறையூா், இளம்புவனம், தீத்தாம்பட்டி, மூப்பன்பட்டி, வடக்குப்பட்டி, சித்திரம்பட்டி, கொடுக்காம்பாறை, சிதம்பராபுரம், சிந்தலக்கரை, வெங்கடேஸ்வரபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முகைதீன் ஆய்வு மேற்கொண்டாா்.

சின்னமலைக்குன்று, கடலையூா் மற்றும் குலசேகரபுரம் பகுதிகளில் உள்ள தரிசு நில பகுதியை பாா்வையிட்டு, 15 ஏக்கா் அளவு தொகுப்பு தோ்வு செய்யும் பணி ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆய்வின்போது, ஊராட்சி மன்றத் தலைவா்கள், வருவாய், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னா், திட்டங்குளம் பகுதியில் கம்பு சான்று விதைப்பண்ணையை பாா்வையிட்டு, விதை கொள்முதல் மற்றும் விதை சுத்திகரிப்பு நிலைய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT