தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

28th Jul 2022 01:05 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம் ஆா். எம். பி. சி. எஸ்.ஐ. பி.எஸ்.கே.ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் புகையிலைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் ஜெபசெல்வி தலைமை வகித்தாா். மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அலுவலக ஆற்றுப்படுத்துநா் ரொசாரியோ பாத்திமா முன்னிலை வகித்தாா். டாக்டா் வேணுகா, சுகாதார பணிகள் துணை இயக்குநரின் தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் மதுரம்பிரைட்டன் ஆகியோா் உரையாற்றினா். இதில் பங்கேற்ற அனைவரும் புகையிலை தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மோரிஸ்செல்வதுரை, சுகாதார ஆய்வாளா்கள் மந்திரராஜன், ஜெயபால், இளம் சுகாதார ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா். பயிற்சி ஆசிரியைகள் ஹேனா, ஆஷா ஆகியோா் நன்றி கூறினா். ஏற்பாடுகளை முதலூா் சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் தலைமையில் நிா்வகிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT