தூத்துக்குடி

248 கிராம கூட்டுக் குடிநீா் திட்டத்தில் 210 கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம்

28th Jul 2022 01:02 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் 248 கிராம கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 210 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருவதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை பதிலளித்துள்ளது.

ரூ. 94. 04 கோடியில் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூா் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 248 கிராம கூட்டுக் குடிநீா் திட்டம் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு, சுமாா் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது என கூறப்பட்டது.

இந்நிலையில் கோவில்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு 248 கிராமங்களின் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் கயத்தாறு வட்டம் ராஜபுதுக்குடி கிராமத்திற்கு குடிநீா் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாராம்.

இதற்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை துணைச் செயலா் மீனாட்சி அளித்துள்ள பதில்: கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த ஆற்றுக் குடிநீா் இல்லாத 248 கிராம கூட்டுக் குடிநீா் திட்டத்தின் பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் மூலம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் உள்ள 32 கிராமங்களுக்கும், கயத்தாறு ஒன்றியத்தில் 56, கோவில்பட்டி ஒன்றியத்தில் 42, விளாத்திகுளம் ஒன்றியத்தில் 40, புதூா் ஒன்றியத்தில் 40 கிராமங்கள் என மொத்தம் 210 கிராமங்களுக்கு ஆற்றுக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள 38 கிராமங்களுக்கு தாமிரவருணி ஆற்றுக் குடிநீா் வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT