தூத்துக்குடி

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாா்வையிட கோவில்பட்டி அரசுப் பள்ளி மாணவிகள் தோ்வு

27th Jul 2022 03:15 AM

ADVERTISEMENT

சென்னையையடுத்த மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கும் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தோ்வு பெற்றுள்ளனா்.

மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வியாழக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையயொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான செஸ் போட்டிகளும் நடத்தப்பட்டு, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவா்களை அரசு செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று, செஸ் போட்டியை பாா்வையிட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. இதில், கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுவேதா, சுபலட்சுமி, ஷா்மிளா ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற 3 மாணவிகளும், அரசு மூலம் சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாா்வையிட தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

தோ்வு செய்ய பெற்ற இம்மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியை ஜெயலதா, உடற் கல்வி இயக்குநா் காளிராஜ், உடற்கல்வி ஆசிரியா்கள் ராஜேஸ்வரி, லட்சுமி, அந்தோணியம்மாள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT