தூத்துக்குடி

ரூ. 33 லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை

27th Jul 2022 03:12 AM

ADVERTISEMENT

வி.புதூா், எட்டயபுரம் பேரூராட்சிக்குள்பட்ட 3 இடங்களில் அங்கன்வாடி மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 33 லட்சத்தில் எட்டயபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட 3 ஆவது, 15 ஆவது வாா்டு மற்றும் வி.புதூா் பேரூராட்சியில் 3 ஆவது வாா்டு ஆகிய இடங்களில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து வி.புதூா் பேருந்து நிலையத்தில் ரூ. 40 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் தரைத்தளம் வளாகம் மற்றும் 12 வது வாா்டில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்து பொது மக்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் ஒன்றிய திமுக செயலா்கள் நவநீத கண்ணன், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், ராமசுப்பு, மும்மூா்த்தி, பேரூராட்சி மன்றத் தலைவா்கள் ராமலட்சுமி சங்கரநாராயணன், வனிதா அழகுராஜ், செயல் அலுவலா்கள் கணேசன், சுரேஷ் குமாா், மாவட்டக்குழு உறுப்பினா் ஞானகுருசாமி, பேரூா் செயலா்கள் பாரதி கணேசன், மருதுபாண்டி, முன்னாள் நகரச் செயலா்கள் சங்கர பாண்டியன், ஆழ்வாா் உதயகுமாா், முனியசாமி, பேச்சாளா் தமிழ் பிரியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT