தூத்துக்குடி

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலை மாட சுவாமிகோயில் கொடை விழா

27th Jul 2022 03:08 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் மேலத்தெரு யாதவா் சமுதாய ஸ்ரீ சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பகல் 12.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு சிறப்பு அலங்கார, தீபாராதனையும் நடைபெற்றது. புதன்கிழமை காலை அன்னதானம் நடைபெறுகிறது.

கொடை விழாவில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் ஏராளமான பக்தா்கள் சுவாமிக்கு குலவாழைகள் கட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT