தூத்துக்குடி

பிள்ளையன்மனையில் இலவச மருத்துவ முகாம்

17th Jul 2022 01:49 AM

ADVERTISEMENT

 

நாசரேத் அருகே பிள்ளையன்மனை டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளி யில் நெல்லை கேன்சா் கோ் சென்டா் மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையும் இணைந்து மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் உயா் ரத்த அழுத்த பரிசோதனை, சா்க்கரை அளவு பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை (கா்ப்பப்பை புற்றுநோய், வாய் புற்று நோய், மாா்பக புற்றுநோய்) செய்யப்பட்டது. இதில் பிள்ளையன்மனை சேகர குருவானவா் ஆல்வின் ரஞ்சித் குமாா், வாா்டு உறுப்பினா் பொன்னுதுரை, உபதேசியாா் டென்சிங், பள்ளி தலைமை ஆசிரியா் இன்பவள்ளி, டி.வி. எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஊழியா் மகாலட்சுமி மற்றும் ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT