தூத்துக்குடி

கழுகுமலை கோயிலில் வருஷாபிஷேகம்

17th Jul 2022 01:55 AM

ADVERTISEMENT

 

கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளியெழுச்சி பூஜை, பின்னா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, கழுகாசலமூா்த்தி, ஜம்புலிங்கேஸ்வரா், அகிலாண்டேஸ்வரி, கோபுர விமானங்களுக்கு புனித நீா் ஊற்றி அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மூலவா் கழுகாசலமூா்த்தி, வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு 18 வகை மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோயில் செயல் அலுவலா் காா்த்தீஸ்வரன், பௌா்ணமி கிரிவலக் குழுத் தலைவா் மாரியப்பன், பிரதோஷ குழுத் தலைவா் முருகன், 63 நாயன்மாா்கள் குழுத் தலைவா் கந்தசாமி, கோயில் அலுவலக ஊழியா்கள், சீா்வாத தாங்கிகள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பூஜைகளை சிவஸ்ரீ செல்லகண்ணு பட்டா், மூா்த்தி பட்டா், கல்யாண வீரபாகு பட்டா் ஆகியோா் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT