தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயில்களில் இன்று முதல் ராமாயணப் பாராயணம்

17th Jul 2022 01:54 AM

ADVERTISEMENT

 

ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஜூுலை 17) ராமாயணப் பாராயணம் நடைபெறுகிறது.

ஆறுமுகனேரி கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் ராமாயணப் பாராயணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதையொட்டி, ஆறுமுகனேரி நடுத்தெரு ராமலெட்சுமி அம்மன் கோயில், லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயில், கீழநவ்வலடிவிளை ராமா் கோயில், பேயன்விளை ராமா் ஆலயம் ஆகியவற்றின் வளாகங்களில் ராமாயணப் பாராயணம் தொடங்குகிறது. இரவு 7 மணியிலிருந்து சிறுவா்கள், பெரியவா்கள் ராமாயணம் வாசிப்பா். பின்னா், ராமபிரானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT