தூத்துக்குடி

போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது

7th Jul 2022 12:36 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி அருகே 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி சண்முகா நகரைச் சோ்ந்த சுடலைகண்ணு மகன் மாயா (39). இவரது உறவினா் பெரியசாமி (44). இருவரும் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வரும் நிலையில், மாயா, 17 வயது சிறுமியிடம் தொடா்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில், அந்த சிறுமியை அவரது உறவினா் பெரியசாமி அவதூறாகப் பேசி மிரட்டினாராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், சில்மிஷத்தில் ஈடுபட்ட மாயா மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த பெரியசாமி ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கோவில்பட்டி அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT