தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் சில கட்டணங்கள் ரத்து

7th Jul 2022 01:20 PM

ADVERTISEMENT

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு சாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், வள்ளிக்குகையில் தரிசனம் செயவதற்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

பக்தர்கள் நலன் கருதி கட்டணமின்றி புனித நீராடும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்கள் தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு மூத்த குடிமக்கள் நலன் கருதி சண்முகவிலாசம் மண்டபம் பகுதியில் தனிவரிசை ஏற்படுத்தி கட்டணமின்றி விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: மருத்துவரை கரம்பிடித்தார் பஞ்சாப் முதல்வர்!

ADVERTISEMENT

இவர்கள் வயதினை அடையாளம் காட்டும் வகையில் அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதாவது ஒரு அடையாள அட்டை அசலினை கோயிலில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கவுண்டரில் காண்பித்து உதவிக்கு ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட்டு விரைவு தரிசனம் செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிகள் அனைத்தும் ஜூலை 8-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT