தூத்துக்குடி

கோவில்பட்டி, விஜயாபுரி, கடம்பூா், பசுவந்தனை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

7th Jul 2022 12:35 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி மின் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு.சகா்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோவில்பட்டி, நக்கலமுத்தன்பட்டி, விஜயாபுரி, எட்டயபுரம், எம்.துரைச்சாமிபுரம், கழுகுமலை, அய்யனாரூத்து, கடம்பூா், பசுவந்தனை, எப்போதும்வென்றான் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளான கோவில்பட்டி பிரதான சாலை பத்மா மருத்துவமனை முதல் ஏ.கே.எஸ். தியேட்டா் வரை, முத்தானந்தபுரம் தெரு, ஆவல்நத்தம், கிழவிபட்டி, கெச்சிலாபுரம், துரைச்சாமிபுரம், செண்பகப்பேரி, குருமலை, வெங்கடாசலபுரம், கழுகாசலபுரம், மும்மலைப்பட்டி, பாறைப்பட்டி, புதூா், லிங்கம்பட்டி, சென்னையம்பட்டி, பெருமாள்பட்டி, சமத்துவபுரம், சீனிவெள்ளாளபுரம், வாகைதாவூா், கூழைத்தேவன்பட்டி, வேலாயுதபுரம், வள்ளிநாயகபுரம், ஆத்திகுளம், மானங்காத்தான், ராமலிங்கபுரம்,ஒட்டுடன்பட்டி, குப்பனாபுரம், கீழமங்கலம், மேலமங்கலம், டி.சண்முகாபுரம், ஆத்திகிணறு, பி.சண்முகாபுரம், சீல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 7) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT