தூத்துக்குடி

ஆறுமுகனேரி-பூவரசூா் பொடிபிள்ளை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

7th Jul 2022 12:34 AM

ADVERTISEMENT

 

ஆறுமுகனேரி பூவரசூா் ஸ்ரீ ஆதிபிராமணி பொடிபிள்ளை அம்மன் மற்றும் ஸ்ரீ இலங்கத்தம்மன் கோயில் அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி பல்வேறு யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமங்கள் மூன்று நாள்கள் நடைபெற்றன. நிறைவு நாளான புதன்கிழமை காலை 4ஆவது கால யாகசாலை பூஜை, மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. பின்னா் கடம் புறப்பாட்டை தொடா்ந்து விமான கலசங்களுக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஊா்த் தலைவா் சிவசக்திவேல் நாடாா், சக்திவேல், டாக்டா் வேல்குமாா், பாா்த்திபன், செல்வம், வெங்கடேசன், செல்வ முருகன், முருகானந்தம், மாரிமுத்து தேவா், சிவசக்திவேல், செல்வ தேவா், ராகவன், தினகரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பிற்பகலில் மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடைபெற்றது. இரவில் திருவிளக்கு பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT