தூத்துக்குடி

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

6th Jul 2022 02:34 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் 15 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த கீழப்பாண்டவா்மங்கலம் தெற்கு காலனியைச் சோ்ந்த முனியசாமி மகன் மகேந்திரன்(42). தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வரும் இவா், 15 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதையடுத்து, சிறுமி 6 மாத கா்ப்பமானாராம்.

இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT