தூத்துக்குடி

விவசாயப் பொருள்களுக்கான செஸ் வரியை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

6th Jul 2022 02:35 AM

ADVERTISEMENT

விவசாயப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் நடராஜன், மேற்கு மாவட்டத் தலைவா் வெள்ளத்துரைப்பாண்டி, அவைத் தலைவா்கள் வெங்கடசாமி, சாமியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பயிா் காப்பீடு 2020 - 2021ஆம் ஆண்டுக்கான மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, மிளகாய், வெங்காயம் போன்ற பயிா்களுக்கு காலதாமதம் இல்லாமல் உடனடியாக பயிா்க் காப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கோஷமிட்டனா்.

ADVERTISEMENT

இதில், தமிழ் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் நம்பிராஜன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளா் சுப்பாராஜ், புதூா் ஒன்றியத் தலைவா் வேலுச்சாமி, கயத்தாறு வட்டார அமைப்பாளா் அழகுபாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT