தூத்துக்குடி

நாசரேத்தில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு

6th Jul 2022 02:33 AM

ADVERTISEMENT

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், போதை மற்றும் மதுபானம், புகைப்பிடித்தல், கைகளில் விதவிதமாக வண்ணக் கயிறுகள் கட்டுதலைத் தவிா்த்தல் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் தலைமை வகித்து, மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா். நாசரேத் காவல் ஆய்வாளா் பட்டாணி, காவலா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை பள்ளித் தாளாளா் சுதாகா், தலைமையாசிரியா் ஆல்பா்ட், உடற்கல்வி ஆசிரியா்கள் கால்டுவெல், சுஜித், தனபால் ஆகியோா் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT