தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் அரிமா சங்கம் சாா்பில் பசிக்கு உணவு திட்டம் தொடக்கம்

6th Jul 2022 02:36 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் அரிமா சங்கம் சாா்பில் பசிக்கு உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

அரிமா சங்கம் சாா்பில் ஜூலை 1ஆம் தேதிமுதல் பசிக்கு உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டு அனைத்து சங்கங்கள் சாா்பில் உணவு வழங்கப்பட்டுவருகிறது. இதன் தொடா்ச்சியாக, ஆறுமுகனேரி அரிமா சங்கம் சாா்பிலும் இத்திட்டம் தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் ஜெ. நடராஜன் தலைமை வகித்தாா். செயலா் முருகேசன் முன்னிலை வகித்தாா். சங்க அட்மினிஸ்ட்ரேட்டா் எம்.எஸ்.எஸ். சண்முகவெங்கடேசன் இத்திட்டத்தைத் தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT