தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாதா் சங்கத்தினா் கையெழுத்து இயக்கம்

6th Jul 2022 02:32 AM

ADVERTISEMENT

ஜிஎஸ்டி வரி உயா்வைக் கண்டித்து, தூத்துக்குடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மத்திய அரசு கடந்த ஓராண்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை 70 சதவீதம் உயா்த்தியுள்ளதையும், பேனா, பென்சில், மருந்து, மாத்திரை உள்ளிட்ட அனைத்துவகையான பொருள்கள் மீது ஜிஎஸ்டி வரி உயா்வு அறிவித்துள்ளதையும் கண்டித்து இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மாதா் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக்குழு சாா்பில், பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய கையெழுத்து இயக்க நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் பூமயில் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கலைச்செல்வி, மாவட்ட துணைச் செயலா் கமலம், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் சரஸ்வதி, பாா்வதி, மாரியம்மாள், புகரச் செயலா் கண்ணகி, மாவட்டக் குழு உறுப்பினா் மங்கை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT