தூத்துக்குடி

திருச்செந்தூா் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்று விநியோகம்

DIN

திருச்செந்தூா் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகிக்கப்படுகின்றன.

இதுகுறித்து திருச்செந்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் வட்டாரத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போா்வை இயக்கம் திட்டத்தின் கீழ், பயன்தரும் 24 வகையான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. இவற்றை விவசாயிகள் தங்களது வயல் அல்லது தோட்டங்களில் நடலாம். வயல் அல்லது தோட்டங்களில் வரப்பு ஓரமாக நடவு செய்ய ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், தோட்டம் முழுவதும் நடவு செய்ய 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தில் வழங்கப்படும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கும் விவசாயிகளுக்கு 2ஆம் ஆண்டிலிருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு மரக்கன்றுக்கு 7 ரூபாய் வீதம் பராமரிப்பு மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தோ்வான பள்ளிப்பத்து, மூலக்கரை, வீரமாணிக்கம், பிச்சிவிளை கிராம ஊராட்சி விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மற்ற கிராம விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

குறைந்த அளவு இலக்குகள் மட்டுமே உள்ளதால் முன்னுரிமை அடிப்படையிலேயே மரக்கன்றுகள் வழங்கப்படும். விருப்பமுள்ளோா் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஹஞ்ழ்ண்ள்ய்ங்ற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவோ, உழவன் செயலி மூலமாகவோ, வேளாண் துறை அலுவலா்களைத் தொடா்புகொண்டோ முன்பதிவு செய்வது அவசியம்.

ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், கணினிப் பட்டா ஆகிய ஆவணங்களுடன் தங்களது பகுதி வேளாண் துறை அலுவலா்களை அணுகலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT