தூத்துக்குடி

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

5th Jul 2022 02:39 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியிலிருந்து கேரளத்துக்கு கடத்தப்படவிருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையிலான போலீஸாா் கோவில்பட்டி பசுவந்தனை சாலை பல்லக்கு ரோடு விலக்கில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த மினி லாரியை சோதனையிட்டபோது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், மினி லாரி ஓட்டுநா் அதே பகுதியைச் சோ்ந்த மாதவன் மகன் தாமஸ் (26) என்பதும், இவா் 2 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

ஓட்டுநரையும், மினி லாரி, அரிசியையும் போலீஸாா், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT