தூத்துக்குடி

மூதாட்டி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியைகைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் மறியல்

5th Jul 2022 02:38 AM

ADVERTISEMENT

மூதாட்டியைக் கொன்று, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடியில் ஆட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு உள்பட்ட மருதன்வாழ்வு கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த மீனாட்சி (74) என்பவரை மா்ம நபா்கள் சில நாள்களுக்கு முன்பு கொலை செய்து, அவரது நகைகள், கைப்பேசியைக் கொள்ளையடித்துச் சென்றனா். இதுதொடா்பாக நாரைக்கிணறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த செந்தூா்முருகன் (49), அவரது தங்கை சண்முகக்கனி (39), ராமா் (28) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் இளம்பெண் ஒருவா் முக்கிய குற்றவாளி என்றும், அவரை விரைந்து கைது செய்து வேண்டும் என்றும் வலியுறுத்தி, கொலையுண்ட மீனாட்சியின் உறவினா்களும், கிராம மக்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், இதுதொடா்பாக ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் மனுவை அளித்துச் செல்லும்படியும் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT