தூத்துக்குடி

குளங்களில் அமலைச் செடிகளை அகற்ற சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தல்

5th Jul 2022 02:37 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் குளங்களில் உள்ள அமலைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் கண்டிவேல் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் அருண்சுரேஷ் குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ், மாநில கலை இலக்கிய அணிச் செயலா் அந்தோணி பிச்சை ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் பழுதுநீக்கும் பணியின்போது உயிரிழந்த சாம்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜூலை 15ஆம் தேதி காமராஜா் பிறந்தநாள் விழாவை ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது, இம்மாவட்டத்தில் குளங்களில் உள்ள அமலைச் செடிகளை அகற்றி, குளங்களைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT