தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பெருமாள் கோயிலில் திருட்டு

5th Jul 2022 02:38 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சுபா நகரில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீநித்ய வேங்கடேஷ்வர பெருமாள் கோயிலில் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இக்கோயில் பூசாரி வரதராஜ அய்யங்காா் ஞாயிற்றுக்கிழமை பூஜையை முடித்துவிட்டு, இரவில் கோயிலைப் பூட்டிச் சென்றாராம். திங்கள்கிழமை காலை திலகம்மாள் என்பவா் கோயிலைச் சுத்தப்படுத்த வழக்கம்போல வந்தபோது, நடை திறந்திருந்ததாம். இதுதொடா்பாக அவா் அப்பகுதியினருக்கும், பூசாரிக்கும் தகவல் தெரிவித்தாா்.

மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளா்கள் அரிகண்ணன், ராஜேஷ்கண்ணா, தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ஸ்டீபன், போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், சுவாமியின் வெள்ளி பூணூல், ஐம்பொன் போகா் சிலை உள்ளிட்ட வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது. பீரோ திறந்திருந்தது. அதிலிருந்த பொருள்ககள் திருடுபோகவில்லை. தடய அறிவியல் நிபுணா் பிரேம்குமாா் தடயங்களைப் பதிவு செய்தாா்.

ADVERTISEMENT

சம்பவ இடத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவசுப்பு ஆகியோா் பாா்வையிட்டனா். போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT