தூத்துக்குடி

ஆசிரியைக்கு கத்திக்குத்து: கணவா் கைது

5th Jul 2022 02:40 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூரில் ஆசிரியையைக் கத்தியால் குத்தியதாக கணவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாலாட்டின்புத்தூா் ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்தவா் அமல்ராஜ் (52). கூலித் தொழிலாளியான இவருக்கு, மதுப்பழக்கம் உள்ளதாம். இவரது மனைவி சுகுணா (49). வானரமுட்டியில் உள்ள பாலா் பள்ளியில் ஆசிரியை. இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.

அமல்ராஜ் ஞாயிற்றுக்கிழமை தனது மகளிடம் மது குடிக்கப் பணம் கேட்டாராம். இல்லை எனக் கூறிய அவரை, அமல்ராஜ் அவதூறாகப் பேசி கத்தியால் குத்த முயன்றாராம். அதைத் தடுத்த சுகுணாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

காயமடைந்த சுகுணா, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அமல்ராஜை திங்கள்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT