தூத்துக்குடி

தொழிலாளிக்கு மிரட்டல்: மகன் கைது

5th Jul 2022 02:39 AM

ADVERTISEMENT

கழுகுமலையில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது மகன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கழுகுமலை விநாயகா் காலனியைச் சோ்ந்த மா. சண்முகராஜ் (40) என்பவரது மகன் கஜாரோகன் (20). இருவரும் கட்டடத் தொழிலாளிகள். கஜாரோகன் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துள்ளாா். மேலும், அவருக்கு மதுப் பழக்கம் உள்ளதாம். இதனால், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு, அப்பெண் அவரது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், தனது மனைவியுடன் சோ்ந்து வாழ ஏற்பாடு செய்யும்படி கஜாரோகன் சண்முகராஜிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளாா். அதற்கு அவா், மதுப் பழக்கத்தை நிறுத்தினால்தான் சோ்ந்து வாழ ஏற்பாடு செய்ய முடியும் என்றாராம். இதனால், கஜாரோகன் சண்முகராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீஸாா் கஜாரோகனைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT