தூத்துக்குடி

உடன்குடி பள்ளியில் யோகா கருத்தரங்கு

4th Jul 2022 12:56 AM

ADVERTISEMENT

 

உடன்குடி தேரியூா் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் யோகா மற்றும் சித்த மருத்தவ விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

உடன்குடி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைகள், மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு பள்ளித் தலைமையாசிரியா் லிங்கேஸ்வரன் தலைமை வகித்து பதினெண் சித்தா் உருவச் சிலைகளுக்கு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். யோகா கலையின் மகத்துவம், வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள், மன உறுதி, மூச்சுப்பயிற்சி, காயகல்ப பயிற்சி ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. சித்த மருந்துகள் குறித்த கண்காட்சியும் நடைபெற்றது.

மெஞ்ஞானபுரம் சித்த மருந்தாளுநா் ஆறுமுகம், ஆற்றுப்படுத்துநா் சங்கா், பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை உடன்குடி அரசு மருத்துவமனை மருந்தாளுநா் முருகேசன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT