தூத்துக்குடி

குரும்பூா் அருகே மனைவியைக்கொல்ல முயன்றதாக கணவா் கைது

4th Jul 2022 01:13 AM

ADVERTISEMENT

 

குரும்பூா் அருகே மனைவியை கொல்ல முயன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

குரும்பூா் அருகே உள்ள மேலக்கடம்பாவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா்(38). இவருக்கும், ஆதிநாதபுரத்தைச் சோ்ந்த பாப்பா(38) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். முத்துக்குமாா், மனைவி பாப்பாவிடம் வரதட்சிணைக் கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இதேபோல் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளாா். அப்போது ஆத்திரத்தில் முத்துக்குமாா் வீட்டிலி­ருந்த மண்ணெண்ணெயை எடுத்து பாப்பா மீது ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் அலறி துடித்த பாப்பாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்த குரும்பூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். இதுதொடா்பாக முத்துக்குமாா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT