தூத்துக்குடி

கோவில்பட்டி ரோட்டரி சங்கத்துக்கு அமைச்சா் பாராட்டுச் சான்றிதழ்

4th Jul 2022 01:13 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டியில் உள்ள ரோட்டரி சங்கத்துக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் காசநோய் இல்லா தமிழகம்-2025 எனும் இலக்கை அடைய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்கிவரும் சிறந்த 100 தொண்டு நிறுவனங்களைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்கிவரும் கோவில்பட்டி ரோட்டரி சங்கத்துக்கும் அமைச்சா் மா. சுப்பிரமணியன் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

இதை, ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநரும் இலவச சத்துணவுத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான விநாயகா ஜி. ரமேஷ் பெற்றுக்கொண்டாா்.

ADVERTISEMENT

மாவட்ட துணை இயக்குநா் (காசம்) சுந்தரலிங்கம் ரோட்டரி சங்க சேவையைப் பாராட்டிப் பேசினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT